கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு
திரும்பப் பெறத் தமிழிசை முடிவு!
சென்னை: செப்.23-2019
தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகக் கனிமொழி வெற்றிப் பெற்றதற்கு எதிராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தற்போதைய தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை சார்பில், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. இதனால் வழக்கைத் திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும், என மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, மனுக் குறித்துக் கருத்துத் தெரிவிக்க ஏதுவாக, உரிய அறிவிக்கையை அரசிதழில் வெளியிட வேண்டும். இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து அக்டோபர் 14இல் முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.