சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் பொறுப்புத் தலைமை நீதிபதி!


சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் பொறுப்புத் தலைமை நீதிபதி!


சென்னை: செப்.22-2019


சென்னை உயர்நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக, நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் வி.கே.தஹில்ரமானி. இவர் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, தனது நீதிபதி பதவியை தஹில்ரமானி இராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடந்த 6ஆம் தேதி அவர் அனுப்பி வைத்தார்.


இந்தக் கடிதத்தைக் குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.  இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக, நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.